மலரும் நினைவுகள் தொடர்ச்சி...

நண்பர்களில் டையிங் செந்தில் தற்போது இல்லை....பத்து வருடம் ஆகிவிட்டது அவன் எங்களை விட்டு மீளாத்துயிலில் ஆழ்ந்து.......இரண்டு செந்தில் இருந்ததால் காலனி செந்தில்,இறந்து போன நண்பன் டையிங் பேக்டரியில் இருந்ததால் அவனுக்கு டையிங் செந்தில் என்று பெயர்.......முதன் முதல் அழுத நண்பனின் மரணம் இன்னுமே எங்களுக்குள் ஒரு துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.....இதில் வித்யா தற்போது நடிகர் சூர்யாவுக்கு லீகல் அட்வைஸர்.....ரமேஷ் திருச்சியில் எஞ்சினியர்....ராம்,திருப்பூரில் யூனியல் மில் ரோடில் புகழ்பெற்ற பல் மருத்துவர்..(ஸ்ரீராம் பல் மருத்துவமனை) சபிதாவும் ராஜேஷும் உடன் பிறந்தவர்கள் ராஜேஷ் சிங்கப்பூரில்.....சாந்தியும் சியாமும் உடன் பிறந்தவர்கள்......காய்த்ரி சென்னை.......சிவக்குமாரின் மனைவி ஜோதி.....ஸ்ரீகாந்த் மெர்செண்டைஸ் எக்ஸ்போர்ட்டர்....சிவக்குமார் ஒரு கம்பெனியின் மேலாளர்..நான் வெட்டியா இருக்கேன் இப்ப குடும்பத்த பாத்துக்கிட்டு.....ப்ரசன்னா வக்கீல்,சதா ஆடிட்டரா இருக்கான்.....முரளி எல்.ஐ.சில டெவலப்மெண்ட் ஆபீஸர்....சத்யா ஹைட்ராபாத்ல இருக்கா....காலனி செந்தில் அக்கவுண்ட்ஸ் ஆபீஸ் வெச்சுருக்கான்....த்லீப் மயூர் சகோதரர்கள்.....ஆனந்த் ப்ளு டார்ட் கொரியரில் இருக்கான்........

இதுல ர்ர்ர்ர்ரொம்ப ஊர் சுத்தினது நானும்,சபி,சத்யாவும்தான் மத்தவங்க எல்லாரும் ர்ர்ர்ரொம்ப நல்லவங்கப்பா ???!!!!!!!!...எல்லா ஆட்டமும் நாங்க மூணு பேர்தான்...ம்ஹும்ம்ம்ம்ம் அது ஒரு அழகிய கனாக்காலம்...ஆனா எல்லோரும் எப்பவும் எங்கயும் இன்னும் தொடர்புல தான் இருக்கோம்.......கிட்டத்தட்ட முப்பது வருட நட்பு....சாயந்திரம் அவங்க அவங்க வேல முடிஞ்சு நல்லா கொட்டிகிட்டு ஒரு எட்டு மணி வாக்கில வெளில வருவோம்....என் வீட்டுக்கு எதுத்த வீடு சபி வீடு எங்க ரெண்டு வீட்டுக்கும் நடுல செந்தில் வீடு........வலது பக்க லைனில் வித்யா சத்யா வீடு.....மூணுக்கும் நடுல ஒரு பாதை இருக்கும்......ரோட்டுல எல்லாம் குட்டிச்சுவர் இருக்குமே உக்காந்துக்க அது மாதிரி நாங்க நின்னே பேசுவோம் அந்த முச்சந்தில பக்கத்துல ஒரு சாக்கடை இருக்கும்......இப்ப நினச்சாலும் சிரிப்பு வருது அந்த சாக்கடைய தாண்டி தாண்டி விளையாட்டும் நடக்கும் எப்பங்கறீங்க பத்தாவது பதினொன்னாவது படிக்கிறப்ப...:)) அப்புறம் மெதுவா சபி வீட்டு திண்னையில உக்காருவோம் எல்லாரும் அடுத்தவங்க தூங்கறாங்களே கத்தாம பேசுவோம் அதெல்லாம் இல்ல ஊருக்கே கேக்கற மாதி அலறுவோம் ஜஸ்ட் பதினொரு மணி வரை......நேரம் ஆக ஆக யாராது வீட்டுல லைட் எரியும் அப்டி எரிஞ்சா போதும் உங்க அரட்டைன்னு சிக்னல்.....அப்பவும் நகரமாட்டோம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலரும் நினைவுகள்:

மலரும் நினைவுகள்:: சொர்க்கமே என்றாலும் அது தேவ்ஜிகாலனி போல வருமா.......திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்த ஒரு தனியாரின் காலனி............இது அனைத்து பிரிவினர்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சொர்க்கமே என்றாலும் அது தேவ்ஜிகாலனி போல வருமா.......திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்த ஒரு தனியாரின் காலனி............இது அனைத்து பிரிவினர்களின் ஒருங்கே அமைத்த ஒர் அழகிய பூந்தோட்டம்..........நான் பிறந்த வளர்ந்து இடம்........புகைவண்டியில் பயணிக்கும் போது பார்த்து இருக்கலாம்.......ஊத்துக்குளி ரோடு செல்லும் வழியில் திருப்பூர் திருப்பதி கோவில் உள்ள தெருவில் நேரே சென்றால் அது பன்சிலால் என்றழைக்கப்படும் தேவ்ஜி காலனியில் தான் சென்றடையும்.......எதிர் எதிர் வரிசையில் வீடுகள் அமைக்கப்பட்ட அழகிய பூங்காவனம் எங்கள் காலனி.....நூறு வீடுகளும்,தொழிற்சாலை,பனியன் கம்பெனி,ஆபிஸ் போன்றவைகளும் இதில் அடக்கம்............


இதில் ஒரு மெஸ்ஸூம் உண்டு மூர்த்தி மெஸ் தற்போது யூனியன் மில் ரோடில் உள்ளது சங்கீதா தியேட்டர் அருகில்.........இங்கு நான்,வித்யா,சபிதா,சத்யக்ருபா,காயத்ரி,நாரயண ப்ரசாத்,சாந்தி,சியாமளா,காலனி செந்தில்,சிவக்குமார்,ஆனந்த்,ப்ரசன்னா,முரளி,ஸ்ரீகாந்த்,டையிங் செந்தில்,மகேஷ்,கோதண்டராம்,ராஜேஷ்,சதா,மயூர்,த்லீப் சேத்தன்,ஜோதி,ரமேஷ் இப்படி ஒரு பெரிய நண்பர்கள் வட்டம்......காலனியில் ஸ்பெஷாலிட்டி இதில் மையத்தில் அழகிய மைதானம் போன்ற அமைப்பில்,சீஸா,சறுக்கி விளையாடும் பாறை,உடற்பயிற்சி செய்யும் பார் போன்றவை,பூத்து குலுங்கும் மரம் செடிகளுக்கிடையே அமைந்தவை.........

எங்கள் வட்டம் அலாதியான அன்பும்,நட்பும் உடையது...........திருப்பூரைச் சுற்றி எங்கு எந்த தியேட்டரில் புதிய படம் ரிலீஸானால் முதல் நாள் எங்கள் குழாம் முதலில்............எந்த வீட்டில் எப்போது வேண்டுமானலும் செல்லவும் அரட்டை அடிக்கவும் சுதந்திரம் உண்டு.........நட்பைத் தாண்டி ஒரு குடும்பம் போல் அனைவரும் இருப்போம்...........வெளியில் பார்ப்பவர்கள் என்னது எங்க போனாலும் இந்த பொண்ணுங்க பசங்க எல்லாம் ஒண்ணா சுத்துறாங்க என்ற கேள்விகளை துடைத்துவிட்டு சுற்றும் சுதந்திரப் பறவைகள்.........எங்கள் குடும்பத்திலும் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தெரியும் எங்களின் சுயக்கட்டுப்பாடும்,கொடுத்த சுதந்திரத்தை அத்து மீறி உபயோக்கிக்க மாட்டோம் என்பது......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புதைத்தும் எரித்தும்........
கரைத்தும் பயன் இல்லை.........
என்ன செய்வேன்.....
உன் நினைவலைகளை......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS