சொர்க்கமே என்றாலும் அது தேவ்ஜிகாலனி போல வருமா.......திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்த ஒரு தனியாரின் காலனி............இது அனைத்து பிரிவினர்களின் ஒருங்கே அமைத்த ஒர் அழகிய பூந்தோட்டம்..........நான் பிறந்த வளர்ந்து இடம்........புகைவண்டியில் பயணிக்கும் போது பார்த்து இருக்கலாம்.......ஊத்துக்குளி ரோடு செல்லும் வழியில் திருப்பூர் திருப்பதி கோவில் உள்ள தெருவில் நேரே சென்றால் அது பன்சிலால் என்றழைக்கப்படும் தேவ்ஜி காலனியில் தான் சென்றடையும்.......எதிர் எதிர் வரிசையில் வீடுகள் அமைக்கப்பட்ட அழகிய பூங்காவனம் எங்கள் காலனி.....நூறு வீடுகளும்,தொழிற்சாலை,பனியன் கம்பெனி,ஆபிஸ் போன்றவைகளும் இதில் அடக்கம்............


இதில் ஒரு மெஸ்ஸூம் உண்டு மூர்த்தி மெஸ் தற்போது யூனியன் மில் ரோடில் உள்ளது சங்கீதா தியேட்டர் அருகில்.........இங்கு நான்,வித்யா,சபிதா,சத்யக்ருபா,காயத்ரி,நாரயண ப்ரசாத்,சாந்தி,சியாமளா,காலனி செந்தில்,சிவக்குமார்,ஆனந்த்,ப்ரசன்னா,முரளி,ஸ்ரீகாந்த்,டையிங் செந்தில்,மகேஷ்,கோதண்டராம்,ராஜேஷ்,சதா,மயூர்,த்லீப் சேத்தன்,ஜோதி,ரமேஷ் இப்படி ஒரு பெரிய நண்பர்கள் வட்டம்......காலனியில் ஸ்பெஷாலிட்டி இதில் மையத்தில் அழகிய மைதானம் போன்ற அமைப்பில்,சீஸா,சறுக்கி விளையாடும் பாறை,உடற்பயிற்சி செய்யும் பார் போன்றவை,பூத்து குலுங்கும் மரம் செடிகளுக்கிடையே அமைந்தவை.........

எங்கள் வட்டம் அலாதியான அன்பும்,நட்பும் உடையது...........திருப்பூரைச் சுற்றி எங்கு எந்த தியேட்டரில் புதிய படம் ரிலீஸானால் முதல் நாள் எங்கள் குழாம் முதலில்............எந்த வீட்டில் எப்போது வேண்டுமானலும் செல்லவும் அரட்டை அடிக்கவும் சுதந்திரம் உண்டு.........நட்பைத் தாண்டி ஒரு குடும்பம் போல் அனைவரும் இருப்போம்...........வெளியில் பார்ப்பவர்கள் என்னது எங்க போனாலும் இந்த பொண்ணுங்க பசங்க எல்லாம் ஒண்ணா சுத்துறாங்க என்ற கேள்விகளை துடைத்துவிட்டு சுற்றும் சுதந்திரப் பறவைகள்.........எங்கள் குடும்பத்திலும் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தெரியும் எங்களின் சுயக்கட்டுப்பாடும்,கொடுத்த சுதந்திரத்தை அத்து மீறி உபயோக்கிக்க மாட்டோம் என்பது......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

ஒப்பிலான் மு.பாலு said...

அன்பான என் இனிய செல்லத் தங்கைக்கு ..அண்ணனின் அன்பான வணக்கம் ...!அருமையாக இருக்கு ..தங்களின் மலரும் நினைவுகள் ...வருடங்கள் வர வர நம்மின் வயது ஏறுகிறது ,,,அந்த நேரத்தில் நம் காலத்தில் பொற்காலமாக விளங்கிய அந்த பிள்ளைப் பருவத்தை நினைவு கூர்வது மனதுக்கு இதமானது ..வாழ்த்துக்கள் ..இதன் தொடர்ச்சி ....? எழுதுங்கள் ...வாழ்க வளமுடன் !

Unknown said...

அட அண்ணோய் பாத்துட்டீங்களா

Post a Comment