மேன் மக்கள்

கடந்த வருடம் நடிகர் திலத்தின் கர்ணம் படம் டிஜிட்டலில் வெளி வந்தபோது கர்ணன் விருதினை பெற நண்பர் #சேரன் கோவை வந்தார்..அப்போது
முரளியிடம் கோவை வருகிறேன்..ஹோட்டல் ரெசிடென்சியில் மாலை இருப்பேன்..நேரம் இருப்பின் வாருங்கள் சந்திப்போம் என்றார்..அவர் இருக்கும் இடத்திற்கு நாம் சென்று அவரை அழைப்பதற்கும் அவர் நாம் இருக்கும் ஊருக்கு வந்து நம்மை அழைப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது...
நான் முரளி என் குழந்தைகள் அனைவரும் சென்றோம்..அப்போது அவர் வர பத்தே நிமிடம்தான் தாமதம்..இரு முறை போனில் அழைத்து தாமத்திற்கு வருந்தினார்..ஹோட்டலுக்குள் நுழைந்தபோதும் வருத்தம் தெரிவித்தார்.அப்போது அங்கே பணிபுரியும் ஒருவர் மிகவும் பவ்யமாக சார் ஒரு புகைப்படம் எடுத்துக்கனும் என்று கேட்ட அடுத்த விநாடி எழுந்து அவரை தோளோடு தோள் அணைத்து வாங்க ப்ரதர் என்று அழைத்து மிகவும் அன்போடு பேசினார்..பின்னர் எங்களுக்கு ஜூஸ் தருவித்து குடும்பத்தில் ஒருவர் போல் எங்களிடத்தில் ஒரு மணி நேரம் உரையாடினார்..மிகவும் நட்பான இயல்பான நண்பர்..
சிறிது புகழ் உச்சிக்கு ஏறினாலே உச்சாணி கொம்பில் ஏறும் மனிதர்களிக்குள் வித்யாசமான நண்பர்..

இவரைப் போலவே இன்று சன் டிவியில் காலை ஒளிபரப்பான அவரின் நேர்காணலும் மிக எளிமையாக அவரைப் போலவே அமைந்தது..அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சற்றும் பதட்டப்படாமால் இயல்பாக பேசினார்...வாழ்த்துக்கள் நண்பா..ஜே.கே படம் வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.. #மேன் #மக்கள்#மேன் #மக்களே..
 —

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் தேவதையின் கடிதம்

என் பெரிய பொண்ணு காலேஜ்ல,ஓரியெண்டேஷன் புரோகிராம் அதுல gratitude என்கிற தலைப்பில் live life னு ஒரு நிகழ்ச்சி நேத்து..அதுல லைஃப்ல யார்க்கெல்லாம் மனசு விட்டு தேங்க் பண்ண் நினைக்கிறீங்களோ அவங்களுக்கு எல்லாம் ஒரு லெட்டர் எழுதி அத அவங்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லிருக்காங்க..அதுல அவ அவளோட அப்பாக்கு,தங்கை அச்சுக்குட்டாக்கு,எங்கம்மாக்கு, இறந்து போன அவளோட கெமிஸ்ட்ரி மாஸ்டர் திரு.சிவசாமிக்கும் எழுதினா..எனக்கு எழுதி சொல்ல வெக்கப்பட்டுகிட்டு அந்த லெட்டரை என் பர்ஸ்ல வெச்சிருக்கா இப்பதான் பாத்தேன்..ஏதோ மூடு அவுட்ல இருந்த எனக்கு அத படிச்சவுடன் சந்தோசத்துல ஆனந்த கண்ணீர்..

To:
my lovable mom,
amma, i know i used to talk back to u always for everything..but i never felt to hurt u or make u feel fr it.i know am sometimes lazy to do things..wen u r asking me to help.but its not dat u should do tat work what bothers me.i never felt dat in my heart.but my laziness makes me not to do dat.i used to hell at u sometimes,i never felt to hurt u mom.wen u r falling sick,i may pretend to care u,its not dat i never care u.i always pray for u amma,i love u so much amma..

i donno how to express it out to u. in next birth i wish to have u as my kid so dat i can do those things which none of the mother can do fr their kid.u are the one who teaches me how to manage a situation tats why u inisists me to do some work..i swear my dear amma i wll do whatever u ask me to do hereafter..i will not be lazy anymore...
yours loving daughter,keerthu kutta..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கரப்பான் பூச்சிக்கு குட்பை

என் ஃப்ரெண்டு ஒருத்தி வீட்டுக்கு போனேன்.....நுழையறப்பவே வாசப்படி மேல கால் வெக்காம குதிச்சேன் மூஞ்சிய அஷ்ட கோணலா வச்சுகிட்டே.....(ஏற்கனவே ரப்பர் வாய்னு முரளியும் பசங்களும் நக்கல்டிப்பாங்க) என் ஃப்ரெண்டு ஏண்டி இன்னுமா சின்ன பசங்க மாதி குதிச்சு குதிச்சு வர ஏன் உன் மூஞ்சி கேவலமா போயிடுச்சுனு கேட்டா.....ஒரு அசுரவதம் பண்ணிட்டேன்னு நகர்ந்தா காலுக்கு அடியில் ஒரு கரப்பான் பூச்சி சட்னியாயிடுச்சு கர்மம்......என்னமோ லலி நா என் வூட்டுக்காரர் கூட பயந்துக்க மாட்டேன்.......இந்த எழவு கராப்பான் பூச்சி சிம்ம சொப்பனமா இருக்குடின்னு சொன்னா........

ஒரு கட்ட பஞ்சயாத்து பண்ணி காலி பண்ண வெச்சா எனக்கு என்ன தருவேன்னு கேட்ட்டேன்.....அடச் சே இவ்வளவுதானா நீ என்ன கேப்பே பத்து ரூபாய்க்கும் இருபதுக்கு விக்கிற ஊசி பாசி கம்மல் மாலை கேப்பே செண்பகப்பூ கேப்பே தரேன்னு நக்கலா சொன்னா.......

மைதா மாவும் போரிங் பவுடரும் ஈக்வல் ப்ரோபோஷன்ல எடுத்து சப்பாத்தி மாவு மாதி பிசைஞ்சு ரொம்ப தண்ணி விடாம சின்ன சின்ன உருண்டையா உருட்டி நிழல்ல உலர்த்தி எடு ஃபேன் காத்துல ட்ரை ஆனவுடனே மறுநாள் எங்கெல்லாம் மிஸ்டர்.கரப்பான் இருக்காரோ அங்க போட்டு வை......கரப்பான் என்ன பல்லி கூட வராது........என் வூட்டுல ஒரு கரப்பான் பூச்சி கூட கிடையாது....நாலு மாசத்துக்குதேன் இதோட வீரியம் இருக்கும் ட்ரை பண்ணு சொன்னேன்......

இரண்டு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்கு போனேன்.....டி லலி நீ லூசா இருந்தாலும் உன் கரப்பு வைத்தியம் சூப்பர்டி எங்க போச்சுன்னே தெரில நிம்மதியா இருக்கு சொல்லிட்டு செண்பகப்பூ இருபது பூ குடுத்தா....
இது முரளியோட ஃப்ரெண்டு சொன்னது பட் காபிரைட்ஸ் ரிசர்வ்டு....ட்ரை பண்னுங்க பார்சல்ல கொரத்தி மாலை அனுப்புங்க மக்காஸ் :))

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

www.dorso.org

ஒரு மூணு வருசத்துக்கு முன்னாடி எங்க அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்து வலது கை கால் வராம படுத்துட்டாங்க....இன்னமும் படுக்கையிலதான்......திருப்பதி போனா திருப்பம் வரும்னு சொன்னாங்க என் திருப்பதி பயணம் என் வாழ்க்கையே புரட்டி போட்டுருச்சு....

உயிரோட இருக்கும் போது பெத்த தாயிக்கு பச்ச தண்ணிகூட குடுக்காம அம்மாவ பத்தி தினமும் அப்டேட் பண்ணாம இருக்க நீயே கொள்ளி வெச்சுக்க என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்லாதேன்னு ஒருப்ரச்னை உருவாச்சு....நானே வெச்சுக்கிறேன்...இருக்கும்போதுசிலசமயம் திட்டியும் அன்பாவும் நானும் கணவரும் என் கொழந்தகளும்தானே பாத்துக்கிறோம்.........இதுக்கு உரிமை இருக்கும்போது ஒரு பொண்ணுக்கு அதுக்கு உரிமை இல்லயா என்ன.........

போனத்துக்கு அப்புறம் எந்த சடங்கு சம்பிரதாயம் பண்ணி என்ன பிரயோசனம்......என் அப்பா என் சின்ன அண்ணன் நினைவு தினத்துக்கு சாப்பிடவே வழி இல்லாத நாலு நல்ல உள்ளங்களூக்கு சாப்பாடு வாங்கிதருவேன் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுது இதில அது போதும்....

வெல் பசங்க இல்லாத பொண் கொழந்தங்க இருக்க பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்.. எனக்க்கு கிடைச்ச மாதி நல்ல கணவர் என் பசங்களுக்கு கிடைப்பாங்களா தெரியாது.....ஒரு முடிவு செஞ்சேன் எனக்கு ஏதாவது ஒரு நிகழ்வு ஏற்பட்டால் ப்ரச்னை வேண்டாம்ன் ஆர்கன் டோனர் ஆகிட்டேன்....(உடல் உறுப்புகள் தானம்,மூளைச்சாவு ஆன) அப்படி இல்லாம ஏதும் நடந்தா மருத்துவ ஆராய்ச்சி மாணவிகளுக்கு உபயோகபடட்டும்னு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்..தவறுதலா அப்பா பேர் போட்டதுனால திருமணம் ஆனவ என்கிறதால் அவங்க ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.......திரும்பவும்சில மாதங்களுக்கு முன்னாடி கணவரின் சம்மததோடு திரும்பவும் டோனர் ஆகிட்டேன்......அதான் பேருக்கு பின்னாடி போட்டுருக்கேன் வெளம்பரத்துக்காக இல்ல.....அந்த சமயத்துல வீட்டுல இருக்கவங்க மறந்துட்டாலும் இங்க ஒரு சில பேர் என் குடும்ப நண்பர்களாக இருக்காங்க.......அவங்க நினைவு படுத்தட்டும் என் ஆசையைன்னு போட்டுருக்கேன்.........விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க்ல போயி பண்ணலாமே......இறந்தபின் கண் தானம்......இருக்கும்போது உடல் தானம்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஈகோ

இதுதான் எப்பேற்பட்ட அசுரனாக இருக்கிறது.....இது இல்லாத மனித ஜீவனே இல்லை..இது காயப்படும்போது வீறு கொண்டு எழும் மனித உள்ளம்,அந்த ஈகோவைக் காப்பாற்றிக் கொள்ள்...எதை வேண்டுமானலும் இழக்க துணிகிறது.....கடைசியில் ஈகோ மட்டும் மிச்சமிருக்க எல்லா உறவுகளையும் நேசத்தையும் இழந்து நிற்கிறது...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்த்த மனமில்லயா

என் கணவர் முரளியின் தோழி ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்கு சமீபத்தி சென்றுருந்தோம்..மிக அருமையான தம்பதிகள்.......கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்தவர்கள்......ரொம்ப அன்பா வ்ந்திருந்த அனைவரையும் தம்பதி சமேதராய் வரவேற்று மகிழ்ச்சியுடன் உபசரித்தனர்...நீங்கள் மற்ற வேலைகளை கவனியுங்கள் என்று நாங்கள் உணவருந்த சென்றோம்...

அப்போது அருகிலிருந்த இரு பெண்மணிகள் (சாஃப்ட்வேரில் லட்சத்தில் வருமானம் பெறுபவர்களின் மனைவிகள்..எங்களுக்கும் தெரிந்தவர்கள் தான்..இருவரும் என்ன ஜீவா பாரேன் நம்மகிட்ட ஹாட் கேஷா கையில இருக்கு..ஆனா வாடகை வீட்டில தான் இருக்கோம்..நாங்களும் ஒரு சந்து பொந்து விடாம வலை வீசி தேடறோம் ஒரு வீடு அமையல..இவளுக்கு வந்த யோகத்த பாரேன் மாச சம்பளம் அதுவும் பட்ஜெட் குடும்பம்....பேங்க்ல கடன வாங்கி பட்ஜெட் போட்டு இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருந்து வீட்ட கட்டிட்டா பாரேன் என்று அங்கலாய்த்தார்..மேலும் ஒவ்வொன்றிலும் குறை,ஏன் பூஜா ரூம் இங்க இருக்கு வாஸ்துபடி இங்க இருக்க கூடாது..சமையல் அறை க்ரில் ஏன் லைட் கலரில் இருக்கு,ஏன் ஹாலில் லைட் ரோஸ் இப்படி குறை கூறிக்கொண்டே இருந்தார்கள்..

அதற்கு அந்த ஜீவா என்ற பெண் ஆமா சுஜி நீ சொன்னது சரிதான்.....நா கூடா ஒரு லட்ச ரூபா கொடுத்திருக்கேன்.ஆனா இப்படி வீடு கட்டி என்ன பண்றது சொல்லு,மாசம் மாசம் கடனை அடைக்காட்டி பேங்க்காரன் நோட்டீஸ் அனுப்பிடுவான் நா எவ்ளோ பேரை பாத்திருக்கேன்..அப்புறம் கைய இறுக்கி பிடிச்சுட்டு வீடு லோன் கட்டணும் கட்டணும்னு பாத்து பாத்து செலவளிக்கணும் இது தேவயான்னு கேட்டார்....... நல்லாருக்கா உணவு எல்லாம் என்று விசாரிக்க அருகில் வந்த முரளியின் தோழி கடைசியில் அவர் சொன்ன வார்த்தைகளை மட்டும் கேட்ட தோழி முகம் களையிழந்து கண்களில் நீ தெளும்பி விட்டது.......முகம் கொள்ளா சிரிப்புடன் பட்டுப் புடவை சரசரக்க தலை கொள்ளா பூவுடன் மங்களகரமாக வலம் வந்து கொண்டிருந்த அத்தோழியின் முகம் பார்க்கவே நெஞ்சம் பதைத்துப் போனது..

உடனே முரளி சற்றென்று அவரின் கவனத்தை திருப்புவதற்காக எங்க சுமேஷ் சார் காணோமே வாங்க கூப்பிடுங்க பாவம் நீங்க குடுத்தது சுடுதண்ணினு தெரியாம ஏதோ தக்காளி சூப்னு பாவம் புகழ்ந்து தள்றார் கூப்பிடுங்க அவரை என்று சொல்லி,உங்க நல்ல மனசுக்கு ஒரு கொறையும் வராது நல்லா இருப்பீங்க...... என்று சொன்னவுடன் அவர் பக்கென்று சிரித்து விட்டு அய்யோ முரளி அது சுடுதண்ணி தான் அவருக்கு கொஞ்சம் இருமல் தொண்டை சரியில்லனு கொடுத்தேன் என்று சிரித்து விட்டார்.விழாக்களுக்கு செல்லும் பெண்கள் ஏன் இப்படி மற்றவர்களை குறை கூறிக்கொண்டும் மனம் புண்படியும் பேசுகிறார்கள் என்று தெரியவில்லையே..மத்தவங்க மனசு புண்படுவதில் நமக்கு என்ன லாபம்..வாழ்க்கை ஒரு முறை அதை நல்ல வித்ததில் அனுபவித்து நல்ல வார்த்தைகள் சொல்லி வாழ்த்த மனம் இல்லயென்றாலும் புண்படுத்தாமல் இருக்கலாமே.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன் மூச்சுக் காற்றில்..
என் ஸ்வாசம் மறக்கிறேன்..
நினைவெங்கும் நீயே
நீக்கமற நிறைந்து நிற்கிறாய்.
உன் நேசத்தை மட்டும்..
தந்து விட்டு போ..
வெற்றிடத்தை நிரப்பிக் கொள்கிறேன்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலரும் நினைவுகள் தொடர்ச்சி...

நண்பர்களில் டையிங் செந்தில் தற்போது இல்லை....பத்து வருடம் ஆகிவிட்டது அவன் எங்களை விட்டு மீளாத்துயிலில் ஆழ்ந்து.......இரண்டு செந்தில் இருந்ததால் காலனி செந்தில்,இறந்து போன நண்பன் டையிங் பேக்டரியில் இருந்ததால் அவனுக்கு டையிங் செந்தில் என்று பெயர்.......முதன் முதல் அழுத நண்பனின் மரணம் இன்னுமே எங்களுக்குள் ஒரு துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.....இதில் வித்யா தற்போது நடிகர் சூர்யாவுக்கு லீகல் அட்வைஸர்.....ரமேஷ் திருச்சியில் எஞ்சினியர்....ராம்,திருப்பூரில் யூனியல் மில் ரோடில் புகழ்பெற்ற பல் மருத்துவர்..(ஸ்ரீராம் பல் மருத்துவமனை) சபிதாவும் ராஜேஷும் உடன் பிறந்தவர்கள் ராஜேஷ் சிங்கப்பூரில்.....சாந்தியும் சியாமும் உடன் பிறந்தவர்கள்......காய்த்ரி சென்னை.......சிவக்குமாரின் மனைவி ஜோதி.....ஸ்ரீகாந்த் மெர்செண்டைஸ் எக்ஸ்போர்ட்டர்....சிவக்குமார் ஒரு கம்பெனியின் மேலாளர்..நான் வெட்டியா இருக்கேன் இப்ப குடும்பத்த பாத்துக்கிட்டு.....ப்ரசன்னா வக்கீல்,சதா ஆடிட்டரா இருக்கான்.....முரளி எல்.ஐ.சில டெவலப்மெண்ட் ஆபீஸர்....சத்யா ஹைட்ராபாத்ல இருக்கா....காலனி செந்தில் அக்கவுண்ட்ஸ் ஆபீஸ் வெச்சுருக்கான்....த்லீப் மயூர் சகோதரர்கள்.....ஆனந்த் ப்ளு டார்ட் கொரியரில் இருக்கான்........

இதுல ர்ர்ர்ர்ரொம்ப ஊர் சுத்தினது நானும்,சபி,சத்யாவும்தான் மத்தவங்க எல்லாரும் ர்ர்ர்ரொம்ப நல்லவங்கப்பா ???!!!!!!!!...எல்லா ஆட்டமும் நாங்க மூணு பேர்தான்...ம்ஹும்ம்ம்ம்ம் அது ஒரு அழகிய கனாக்காலம்...ஆனா எல்லோரும் எப்பவும் எங்கயும் இன்னும் தொடர்புல தான் இருக்கோம்.......கிட்டத்தட்ட முப்பது வருட நட்பு....சாயந்திரம் அவங்க அவங்க வேல முடிஞ்சு நல்லா கொட்டிகிட்டு ஒரு எட்டு மணி வாக்கில வெளில வருவோம்....என் வீட்டுக்கு எதுத்த வீடு சபி வீடு எங்க ரெண்டு வீட்டுக்கும் நடுல செந்தில் வீடு........வலது பக்க லைனில் வித்யா சத்யா வீடு.....மூணுக்கும் நடுல ஒரு பாதை இருக்கும்......ரோட்டுல எல்லாம் குட்டிச்சுவர் இருக்குமே உக்காந்துக்க அது மாதிரி நாங்க நின்னே பேசுவோம் அந்த முச்சந்தில பக்கத்துல ஒரு சாக்கடை இருக்கும்......இப்ப நினச்சாலும் சிரிப்பு வருது அந்த சாக்கடைய தாண்டி தாண்டி விளையாட்டும் நடக்கும் எப்பங்கறீங்க பத்தாவது பதினொன்னாவது படிக்கிறப்ப...:)) அப்புறம் மெதுவா சபி வீட்டு திண்னையில உக்காருவோம் எல்லாரும் அடுத்தவங்க தூங்கறாங்களே கத்தாம பேசுவோம் அதெல்லாம் இல்ல ஊருக்கே கேக்கற மாதி அலறுவோம் ஜஸ்ட் பதினொரு மணி வரை......நேரம் ஆக ஆக யாராது வீட்டுல லைட் எரியும் அப்டி எரிஞ்சா போதும் உங்க அரட்டைன்னு சிக்னல்.....அப்பவும் நகரமாட்டோம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலரும் நினைவுகள்:

மலரும் நினைவுகள்:: சொர்க்கமே என்றாலும் அது தேவ்ஜிகாலனி போல வருமா.......திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்த ஒரு தனியாரின் காலனி............இது அனைத்து பிரிவினர்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சொர்க்கமே என்றாலும் அது தேவ்ஜிகாலனி போல வருமா.......திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்த ஒரு தனியாரின் காலனி............இது அனைத்து பிரிவினர்களின் ஒருங்கே அமைத்த ஒர் அழகிய பூந்தோட்டம்..........நான் பிறந்த வளர்ந்து இடம்........புகைவண்டியில் பயணிக்கும் போது பார்த்து இருக்கலாம்.......ஊத்துக்குளி ரோடு செல்லும் வழியில் திருப்பூர் திருப்பதி கோவில் உள்ள தெருவில் நேரே சென்றால் அது பன்சிலால் என்றழைக்கப்படும் தேவ்ஜி காலனியில் தான் சென்றடையும்.......எதிர் எதிர் வரிசையில் வீடுகள் அமைக்கப்பட்ட அழகிய பூங்காவனம் எங்கள் காலனி.....நூறு வீடுகளும்,தொழிற்சாலை,பனியன் கம்பெனி,ஆபிஸ் போன்றவைகளும் இதில் அடக்கம்............


இதில் ஒரு மெஸ்ஸூம் உண்டு மூர்த்தி மெஸ் தற்போது யூனியன் மில் ரோடில் உள்ளது சங்கீதா தியேட்டர் அருகில்.........இங்கு நான்,வித்யா,சபிதா,சத்யக்ருபா,காயத்ரி,நாரயண ப்ரசாத்,சாந்தி,சியாமளா,காலனி செந்தில்,சிவக்குமார்,ஆனந்த்,ப்ரசன்னா,முரளி,ஸ்ரீகாந்த்,டையிங் செந்தில்,மகேஷ்,கோதண்டராம்,ராஜேஷ்,சதா,மயூர்,த்லீப் சேத்தன்,ஜோதி,ரமேஷ் இப்படி ஒரு பெரிய நண்பர்கள் வட்டம்......காலனியில் ஸ்பெஷாலிட்டி இதில் மையத்தில் அழகிய மைதானம் போன்ற அமைப்பில்,சீஸா,சறுக்கி விளையாடும் பாறை,உடற்பயிற்சி செய்யும் பார் போன்றவை,பூத்து குலுங்கும் மரம் செடிகளுக்கிடையே அமைந்தவை.........

எங்கள் வட்டம் அலாதியான அன்பும்,நட்பும் உடையது...........திருப்பூரைச் சுற்றி எங்கு எந்த தியேட்டரில் புதிய படம் ரிலீஸானால் முதல் நாள் எங்கள் குழாம் முதலில்............எந்த வீட்டில் எப்போது வேண்டுமானலும் செல்லவும் அரட்டை அடிக்கவும் சுதந்திரம் உண்டு.........நட்பைத் தாண்டி ஒரு குடும்பம் போல் அனைவரும் இருப்போம்...........வெளியில் பார்ப்பவர்கள் என்னது எங்க போனாலும் இந்த பொண்ணுங்க பசங்க எல்லாம் ஒண்ணா சுத்துறாங்க என்ற கேள்விகளை துடைத்துவிட்டு சுற்றும் சுதந்திரப் பறவைகள்.........எங்கள் குடும்பத்திலும் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தெரியும் எங்களின் சுயக்கட்டுப்பாடும்,கொடுத்த சுதந்திரத்தை அத்து மீறி உபயோக்கிக்க மாட்டோம் என்பது......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புதைத்தும் எரித்தும்........
கரைத்தும் பயன் இல்லை.........
என்ன செய்வேன்.....
உன் நினைவலைகளை......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS