www.dorso.org

ஒரு மூணு வருசத்துக்கு முன்னாடி எங்க அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்து வலது கை கால் வராம படுத்துட்டாங்க....இன்னமும் படுக்கையிலதான்......திருப்பதி போனா திருப்பம் வரும்னு சொன்னாங்க என் திருப்பதி பயணம் என் வாழ்க்கையே புரட்டி போட்டுருச்சு....

உயிரோட இருக்கும் போது பெத்த தாயிக்கு பச்ச தண்ணிகூட குடுக்காம அம்மாவ பத்தி தினமும் அப்டேட் பண்ணாம இருக்க நீயே கொள்ளி வெச்சுக்க என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்லாதேன்னு ஒருப்ரச்னை உருவாச்சு....நானே வெச்சுக்கிறேன்...இருக்கும்போதுசிலசமயம் திட்டியும் அன்பாவும் நானும் கணவரும் என் கொழந்தகளும்தானே பாத்துக்கிறோம்.........இதுக்கு உரிமை இருக்கும்போது ஒரு பொண்ணுக்கு அதுக்கு உரிமை இல்லயா என்ன.........

போனத்துக்கு அப்புறம் எந்த சடங்கு சம்பிரதாயம் பண்ணி என்ன பிரயோசனம்......என் அப்பா என் சின்ன அண்ணன் நினைவு தினத்துக்கு சாப்பிடவே வழி இல்லாத நாலு நல்ல உள்ளங்களூக்கு சாப்பாடு வாங்கிதருவேன் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுது இதில அது போதும்....

வெல் பசங்க இல்லாத பொண் கொழந்தங்க இருக்க பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்.. எனக்க்கு கிடைச்ச மாதி நல்ல கணவர் என் பசங்களுக்கு கிடைப்பாங்களா தெரியாது.....ஒரு முடிவு செஞ்சேன் எனக்கு ஏதாவது ஒரு நிகழ்வு ஏற்பட்டால் ப்ரச்னை வேண்டாம்ன் ஆர்கன் டோனர் ஆகிட்டேன்....(உடல் உறுப்புகள் தானம்,மூளைச்சாவு ஆன) அப்படி இல்லாம ஏதும் நடந்தா மருத்துவ ஆராய்ச்சி மாணவிகளுக்கு உபயோகபடட்டும்னு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்..தவறுதலா அப்பா பேர் போட்டதுனால திருமணம் ஆனவ என்கிறதால் அவங்க ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.......திரும்பவும்சில மாதங்களுக்கு முன்னாடி கணவரின் சம்மததோடு திரும்பவும் டோனர் ஆகிட்டேன்......அதான் பேருக்கு பின்னாடி போட்டுருக்கேன் வெளம்பரத்துக்காக இல்ல.....அந்த சமயத்துல வீட்டுல இருக்கவங்க மறந்துட்டாலும் இங்க ஒரு சில பேர் என் குடும்ப நண்பர்களாக இருக்காங்க.......அவங்க நினைவு படுத்தட்டும் என் ஆசையைன்னு போட்டுருக்கேன்.........விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க்ல போயி பண்ணலாமே......இறந்தபின் கண் தானம்......இருக்கும்போது உடல் தானம்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment