மேன் மக்கள்

கடந்த வருடம் நடிகர் திலத்தின் கர்ணம் படம் டிஜிட்டலில் வெளி வந்தபோது கர்ணன் விருதினை பெற நண்பர் #சேரன் கோவை வந்தார்..அப்போது
முரளியிடம் கோவை வருகிறேன்..ஹோட்டல் ரெசிடென்சியில் மாலை இருப்பேன்..நேரம் இருப்பின் வாருங்கள் சந்திப்போம் என்றார்..அவர் இருக்கும் இடத்திற்கு நாம் சென்று அவரை அழைப்பதற்கும் அவர் நாம் இருக்கும் ஊருக்கு வந்து நம்மை அழைப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது...
நான் முரளி என் குழந்தைகள் அனைவரும் சென்றோம்..அப்போது அவர் வர பத்தே நிமிடம்தான் தாமதம்..இரு முறை போனில் அழைத்து தாமத்திற்கு வருந்தினார்..ஹோட்டலுக்குள் நுழைந்தபோதும் வருத்தம் தெரிவித்தார்.அப்போது அங்கே பணிபுரியும் ஒருவர் மிகவும் பவ்யமாக சார் ஒரு புகைப்படம் எடுத்துக்கனும் என்று கேட்ட அடுத்த விநாடி எழுந்து அவரை தோளோடு தோள் அணைத்து வாங்க ப்ரதர் என்று அழைத்து மிகவும் அன்போடு பேசினார்..பின்னர் எங்களுக்கு ஜூஸ் தருவித்து குடும்பத்தில் ஒருவர் போல் எங்களிடத்தில் ஒரு மணி நேரம் உரையாடினார்..மிகவும் நட்பான இயல்பான நண்பர்..
சிறிது புகழ் உச்சிக்கு ஏறினாலே உச்சாணி கொம்பில் ஏறும் மனிதர்களிக்குள் வித்யாசமான நண்பர்..

இவரைப் போலவே இன்று சன் டிவியில் காலை ஒளிபரப்பான அவரின் நேர்காணலும் மிக எளிமையாக அவரைப் போலவே அமைந்தது..அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சற்றும் பதட்டப்படாமால் இயல்பாக பேசினார்...வாழ்த்துக்கள் நண்பா..ஜே.கே படம் வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.. #மேன் #மக்கள்#மேன் #மக்களே..
 —

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment