வாழ்த்த மனமில்லயா

என் கணவர் முரளியின் தோழி ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்கு சமீபத்தி சென்றுருந்தோம்..மிக அருமையான தம்பதிகள்.......கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்தவர்கள்......ரொம்ப அன்பா வ்ந்திருந்த அனைவரையும் தம்பதி சமேதராய் வரவேற்று மகிழ்ச்சியுடன் உபசரித்தனர்...நீங்கள் மற்ற வேலைகளை கவனியுங்கள் என்று நாங்கள் உணவருந்த சென்றோம்...

அப்போது அருகிலிருந்த இரு பெண்மணிகள் (சாஃப்ட்வேரில் லட்சத்தில் வருமானம் பெறுபவர்களின் மனைவிகள்..எங்களுக்கும் தெரிந்தவர்கள் தான்..இருவரும் என்ன ஜீவா பாரேன் நம்மகிட்ட ஹாட் கேஷா கையில இருக்கு..ஆனா வாடகை வீட்டில தான் இருக்கோம்..நாங்களும் ஒரு சந்து பொந்து விடாம வலை வீசி தேடறோம் ஒரு வீடு அமையல..இவளுக்கு வந்த யோகத்த பாரேன் மாச சம்பளம் அதுவும் பட்ஜெட் குடும்பம்....பேங்க்ல கடன வாங்கி பட்ஜெட் போட்டு இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருந்து வீட்ட கட்டிட்டா பாரேன் என்று அங்கலாய்த்தார்..மேலும் ஒவ்வொன்றிலும் குறை,ஏன் பூஜா ரூம் இங்க இருக்கு வாஸ்துபடி இங்க இருக்க கூடாது..சமையல் அறை க்ரில் ஏன் லைட் கலரில் இருக்கு,ஏன் ஹாலில் லைட் ரோஸ் இப்படி குறை கூறிக்கொண்டே இருந்தார்கள்..

அதற்கு அந்த ஜீவா என்ற பெண் ஆமா சுஜி நீ சொன்னது சரிதான்.....நா கூடா ஒரு லட்ச ரூபா கொடுத்திருக்கேன்.ஆனா இப்படி வீடு கட்டி என்ன பண்றது சொல்லு,மாசம் மாசம் கடனை அடைக்காட்டி பேங்க்காரன் நோட்டீஸ் அனுப்பிடுவான் நா எவ்ளோ பேரை பாத்திருக்கேன்..அப்புறம் கைய இறுக்கி பிடிச்சுட்டு வீடு லோன் கட்டணும் கட்டணும்னு பாத்து பாத்து செலவளிக்கணும் இது தேவயான்னு கேட்டார்....... நல்லாருக்கா உணவு எல்லாம் என்று விசாரிக்க அருகில் வந்த முரளியின் தோழி கடைசியில் அவர் சொன்ன வார்த்தைகளை மட்டும் கேட்ட தோழி முகம் களையிழந்து கண்களில் நீ தெளும்பி விட்டது.......முகம் கொள்ளா சிரிப்புடன் பட்டுப் புடவை சரசரக்க தலை கொள்ளா பூவுடன் மங்களகரமாக வலம் வந்து கொண்டிருந்த அத்தோழியின் முகம் பார்க்கவே நெஞ்சம் பதைத்துப் போனது..

உடனே முரளி சற்றென்று அவரின் கவனத்தை திருப்புவதற்காக எங்க சுமேஷ் சார் காணோமே வாங்க கூப்பிடுங்க பாவம் நீங்க குடுத்தது சுடுதண்ணினு தெரியாம ஏதோ தக்காளி சூப்னு பாவம் புகழ்ந்து தள்றார் கூப்பிடுங்க அவரை என்று சொல்லி,உங்க நல்ல மனசுக்கு ஒரு கொறையும் வராது நல்லா இருப்பீங்க...... என்று சொன்னவுடன் அவர் பக்கென்று சிரித்து விட்டு அய்யோ முரளி அது சுடுதண்ணி தான் அவருக்கு கொஞ்சம் இருமல் தொண்டை சரியில்லனு கொடுத்தேன் என்று சிரித்து விட்டார்.விழாக்களுக்கு செல்லும் பெண்கள் ஏன் இப்படி மற்றவர்களை குறை கூறிக்கொண்டும் மனம் புண்படியும் பேசுகிறார்கள் என்று தெரியவில்லையே..மத்தவங்க மனசு புண்படுவதில் நமக்கு என்ன லாபம்..வாழ்க்கை ஒரு முறை அதை நல்ல வித்ததில் அனுபவித்து நல்ல வார்த்தைகள் சொல்லி வாழ்த்த மனம் இல்லயென்றாலும் புண்படுத்தாமல் இருக்கலாமே.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment