சிறந்த புத்தகங்களே நல்ல நண்பன்..

முகநூல் நண்பர் திரு பெ.கருணாகரனின் ‘காகிதப் படகில் சாகச பயணம்’ நூல் பற்றிய சிறிய விமர்சனம்..

சிலுவைகளையும் சிறகுகளாக்கிப் பறந்த ஒரு பட்டாம்பூச்சியின் நெகிழ வைக்கும் கால் நூற்றாண்டு சிறகடிப்பு..திருப்பங்களும்,சவால்களும் நிறைந்தது தான் வாழ்க்கை..அதை எல்லாரும் ஏதோ விதத்தில் வேண்டுமோ வேண்டாமோ கட்டாயம் சந்தித்து தான் ஆக வேண்டும்,இது இயற்கையின் நியதி..
படகோட்டி,எந்த சூறாவளியோ சுனாமியோ வந்தாலும்,சிறிது கூட சஞ்சலமில்லாமல் துடுப்பை இயக்க வேண்டும்..இங்க மனம் தான் துடுப்பு..எதற்கும் அஞ்சாமல்,சக பயணிகளை எந்த பாதிப்பும் இல்லாமல் கரை சேர்க்க வேண்டும்..பொதுவாக எல்லாருக்கும் வாழ்வில் கஷ்டம்,சுகம், துக்கம் எல்லாமே இருந்திருக்கும்..ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று துச்சமாக எண்ணி சவாலை முறியடித்திருக்கிறார்..இதைப் படித்தவுடன்,போராட்டமே வாழ்க்கை என்று அவ்வப்பொழுது துக்கப்படும் நான்,நான் பட்டதெல்லாம் ஒரு கஷ்டமே இல்லை என்றுணர்ந்து விட்டேன்..எல்லாருமே தான்,வெற்றி பெற்றதையும்,வாழ்த்துக்களால் மகிழ்ந்ததையும் பற்றியுமே எழுதுவார்கள்..ஆனால் தான் பெற்ற அவமானங்களையுமே அசால்ட்டாக எழுதியிருக்கிறார்..
போர்க்களத்தில் பொம்மை சிப்பாய்கள்,சில நேரங்களில் சில மனிதர்கள்,கலாட்டா கல்யாணம்,திரு மாலன் சார் அவர்களை நினைவு கூர்ந்ததும்,கமல் என்ன உங்க பக்கத்து வீட்டுக்காரரா,அண்ணன் காட்டிய வழி,இவைகளை படித்ததும்,உயரத்தில் இருக்கும் இந்த மனிதர்,விஷ்வரூபமாய் எழுந்து விட்டார்..குறிப்பாக,குழந்தை விருத்தாம்பிகை பற்றி எழுதியது படித்ததும்,கண்ணில் நீர் கோர்த்து விட்டது..மனம் கனத்து,அலை பேசியில் பேசும் போது சற்றே குரல கமற நெகிழ்ந்துவிட்டேன்..
குறிப்பாக அத்தனை இடர்களையும் பொறுத்துக் கொண்டு பயணித்த திருமதி லக்‌ஷ்மி கருணாகரனுக்கு வானத்தனை வந்தனங்கள்..
திரு கார்ட்டுனிஸ்ட் முருகு அவர்களின் வடிவமைப்பும்,மேடம் சுபா வெங்கட்டின் அணிந்துரையும் படகிற்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது..
எந்தக் குதிரையும்,முதலில் வருவதற்காகச் சந்தோசமோ,கடைசியில் வந்ததற்கு,வருத்தமோ அடைவதில்லை,ஓட்டம் மட்டுமே சந்தோசம்..எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...சியர்ஸ்ஸ் மச்சி..
பயணிகள் பயணிக்க அணுக kagithapadagu@gmail.com
எனக்குத் தெரிந்த முறையில் விமர்சித்துள்ளேன்.சிறியவளை பொறுத்தருள்க..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Unknown said...

thank you @gayathri

Post a Comment